திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள பேரூர் திமுக அலுவலகத்தில் பேரூர் திமுக இளைஞர் அணி சார்பில் தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48- வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ. அன்பரசன், பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன் ஆகியோர் பிறந்த நாள் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது. நிகழ்வில் வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், பேரூர் பொருளாளர் புருஷோத்தமன், துணை செயலாளர் லாயம் இரமேஷ், ஒன்றிய பிரதிநிதி சிங்குதெரு ராஜேஷ், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளரும், பேரூராட்சி மன்ற உறுப்பினருமான செல்வமணி, க.செல்வம், ரம்ஜான் பீவி சிவராஜ் உள்ளிட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், லாயம் செழியன் உள்ளிட்ட வார்டு செயலாளர்கள், 6- வது வார்டு திமுக பொருளாளர் சண்முகசுந்தரம் யாதவ் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.