திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் தேன்மலர் பள்ளி ‘இழுத்து மூடப்படும்’ என்ற வதந்தி பரபரப்பு; பெற்றோர்கள் திரளாக கூடினர் — போலீஸ் தலையீடு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம்:
தாராபுரம் புதிய பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வரும் தேன்மலர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை “இழுத்து மூடப்பட உள்ளது” எனும் வதந்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, பள்ளி வளாகம் முன்பு பரபரப்பு நிலவி வருகிறது.
காலை முதலே Instagram, Facebook, WhatsApp போன்ற தளங்களில் பள்ளி மூடப்படுவதாக கூறி வைரலாக பரவிய வீடியோவை பார்த்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்துடன் பள்ளி முன்பு திரண்டனர்.
இதையடுத்து சூழ்நிலை கூடிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாராபுரம் டிஎஸ்பி சுரேஷ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் விஜயசாரதி ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமை சமாதானப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
பள்ளி தாளாளரின் தண்டபாணி அண்ணன் மகனான, வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் பள்ளி கட்டடத்தை சீல் வைப்பதற்கான உத்தரவு வந்ததாக வாட்ஸ் அப் மூலம் பரவிய தகவலே இந்த பரபரப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது.
பள்ளி எழுத்து மூடப்பட்டால் மாணவர்களின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற அச்சத்திலேயே பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
“வீடியோவில் கூறப்பட்ட தகவல்கள் உண்மையா? பள்ளி உண்மையில் மூடப்படுமா? எங்கள் பிள்ளைகளின் படிப்பு நிலை என்ன ஆகும்?” என பெற்றோர்கள் கவலை வெளியிட்டனர்.
பரவி வரும் தகவல்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி நிர்வாகத்திடமும் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளால் ஏற்படும் சிக்கலுக்கு தீர்வு காண அதிகாரிகள் தீவிரமாக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.