“செய்தி, ஜீவா செந்தில் “
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி,வட்டம் வடலூர், மருவாய் பகுதியில் பரவானாறு
அமைந்துள்ளது . இந்த பரவனாற்றின் வரும் நீரை நம்பி மருவாய், நைனார்க்குப்பம், கல்குணம், அரங்கமங்கலம், ஓணாங்குப்பம், கரைமேடு உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்நிலையில் பசுமை தாயகத்தின் சார்பில் என்எல்சி உபரி நீர் செல்லும் பரவனாற்று வாய்க்காலை உடனடியாக தூர்வார வேண்டும் அருகில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை காவேரி டெல்டா பகுதிகளுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் பாமகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெருமாள் ஏரியை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பரவனாறு பகுதியும் இருபுறமும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதில் ஒரு பகுதியை மட்டும் டெல்டா பகுதியாக அறிவித்துவிட்டு மற்றொரு பகுதியை அறிவிக்காமல் இருப்பது தான் இன்று விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.மேலும் பரவனாறு பகுதியை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இதன் அருகாமையில் எப்பொழுது என்எல்சி நிறுவனம் எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அதில் இருந்து தான் பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டது. அதிலிருந்து வெளியேறும் சாம்பல் நீரால் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது.மேலும் என்எல்சி நிறுவனத்தில் வெளியேற்றக்கூடிய உபரி நீரை என் எல்சி நிறுவனமே சாம்பல் வடிகட்டி சுத்திகரிப்பு செய்து விட்டிருந்தால் பரவாயில்லை ஆனால் சாம்பல் கலந்த நீரை பல வருடங்களாக இந்த ஆற்றில் கலந்து விடுகின்றனர்.
இவ்வாறு சாம்பல் கலந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி வருவதால் இப்பகுதியில் பெரிதும் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகின்றது.இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து வருகிறது.மேலும் இந்த ஆற்றில் முழுவதும் சாம்பல் படிந்து காணப்படுகிறது.
இதனால் விவசாய நிலத்தில் கரி படிந்து விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளதாக விவசாயிகள் வேதனை அளிக்கிறது.இதனால் இப்பகுதியை தூர்வார வேண்டும். மேலும் ரூபாய் 16 கோடிக்கு தூர்வாரும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு சரியாக தூர்வாராமால் சென்று விட்டார்கள்.என்எல்சி நிறுவனத்தை எதிர்த்து கேட்பதற்கு எந்த கட்சிக்கும் துணிவில்லை இதனை எதிர்த்து போராடும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் பூட்டு போடு போராட்டம் மற்றும் வஜ்ரா வாகனத்தை எதிர்த்து போராட்டம் செய்து பல பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஏரியிலிருந்து வரக்கூடிய தண்ணீரை கால்நடைகள் மற்றும் விவசாய சாகுபடி செய்வதற்கு கூட பயனற்ற தண்ணீராக இருந்து வருகிறது. நீர்வளங்களை பாதுகாக்க தனியாக பட்ஜெட் போட வேண்டும் மேலும் விவசாயத்திற்கு என்று மூன்று அமைச்சர்களை நியமித்து நீர்வளங்களை பாதுகாக்க வேண்டும் .மேலும் இந்தப் பகுதியை டெல்டா மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது நீண்டகால விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. மேலும் பெருமாள் ஏரிக்கரை பகுதியை சுற்றியுள்ள கிராமங்களையும் டெல்டா பகுதியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.டெல்டா பகுதிகளாக அறிவிக்காவிட்டால் பாமக சார்பாக போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதில் மாவட்ட செயலாளர்கள் சண்முத்துகிருஷ்ணன்,செல்வ மகேஷ்,தேர்தல் பணிக்குழு தலைவர் தாமரைக்கண்ணன்,மாவட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி,ஒன்றிய செயலாளர் செல்வ சோழன்,வடலூர் நகர செயலாளர் புஷ்பராஜ்,பெருமாள் ஏரி விவசாய சங்க தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.