கோவை மாநகர் மாவட்டம் இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநாடு-5000 வியாபாரிகள் பங்கேற்க திட்டம் !
இந்து முன்னணி தென் பாரத அமைப்பாளர்
க.பக்தன் அவர்கள் அறிவிப்பு !
கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திப்பு நேற்று காட்டூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது தென்பாரத அமைப்பாளர் க. பக்தன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் .
கூட்டத்தில் அவர் பேசும் போது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அன்னையர்கள் கலந்து கொள்ளும் வேல்வழிபாடு வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி திருப்பூரில் உள்ள அலகு மலையில் நடைபெறுகிறது.
அதில் அனைத்து சமுதாயப் பெரியோர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார் மேலும் இந்து முன்னணியின் வியாபாரிகள் அமைப்பான இந்து வியாபாரிகள் நலச் சங்க மாநாடு வருகின்ற ஜனவரி 4ஆம் தேதி வடகோயில் அமைந்துள்ள குஜராத் சமாஜ் பவனில் நடைபெற இருக்கின்றது .
சுதேசி பொருளாதாரத்தை வளர்க்கும் வகையிலும் இந்து வியாபாரிகளை இணைக்கும் வகையிலும் இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது இந்த மாநாட்டில் கோவையில் உள்ள
வியாபாரப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
மாநில நிர்வாக குழு உறுப்பினர் S.சதீஷ் கோட்ட பொதுச்செயலாளர் பாபா ஆ.கிருஷ்ணன் கோட்டச் செயலாளர் உருவை K. பாலன் மாவட்ட பொதுச்செயலாளர் m.ஜெய்சங்கர் மாவட்ட செய்தி தொடர்பாளர் சி. தனபால் மாவட்டச் செயலாளர்கள் ஜீவானந்தம் ஆறுச்சாமி மகேஸ்வரன் சதீஷ் வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள் எம் ஆர் முரளி முருகேஷ் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.