பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்/ மாவட்ட வழங்கல் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பெரம்பலூர்.நவ.29. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தாங்கள் எவ்வாறு இலக்கை எய்தினீர்கள் என்பது குறித்து அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் தெரிவித்து, அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் 100 சதவீத இலக்கினை எய்திட உதவி செய்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி அறிவுறுத்தியதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சியர்கள் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில், ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய 58 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய 58 தன்னார்வலர்கள் என மொத்தம் 116 நபர்களை பாராட்டி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்/ வருவாய் கோட்டாட்சியர் அனிதா அவர்கள் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்/ மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4.11.2025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி, அதை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து, பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து திரும்பப் பெற்று, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேகச் செயலியில் பதிவேற்றும் பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலத்தூர் வட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளும் இடம்பெறும், இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 50 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 57 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 107 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 26 வாக்குச்சாவடி மையங்கள், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 56 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 82 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்காளர்களிடம் கணக்கீட்டுப் படிவத்தை வழங்கி, அதை முறையாக பூர்த்தி செய்வதற்கான விளக்கங்களையும் கொடுத்து, படிவத்தை பூர்த்தி செய்ய உதவி தேவைப்படுவோருக்கு உதவி, அனைத்துப் படிவங்களையும் திரும்பப் பெற்று அவற்றை தேர்தல் ஆணையத்தின் பிரத்யேகச் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
அதனடிப்படையில் இன்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 26 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 32 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் என மொத்தம் 58 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய 58 தன்னார்வலர்கள் என மொத்தம் 116 நபர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி முழு இலக்கையும் எய்தியதற்காக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் / மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.