கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர்
மேம்பாட்டுத் திட்டம்
தமிழக அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் மகளிரை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் நோக்கத்துடனும் தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்தினை 2025-26 முதல் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில் முனைவோராக்கிட இவ்வரசு உறுதி பூண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் தொடர்பான தொழில் துவங்க மேம்பட்ட பயிற்சியுடன், மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் தொழில் புரிய ரூ.10.00இலட்சம்/- வரை பிணையமில்லாமல் மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும். கடன் தொகையில் 25 சதவீதம் அதிக பட்சம் ரூ. 2.00/-இலட்சம் மானியமாக வழங்கப்படும்.
பெண்களுக்கான இச்சிறப்புத் திட்டத்தின் கீழ் அனைத்து வகுப்பு மகளிரும் விண்ணப்பித்து பயன் பெறலாம். வயது வரம்பு 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவரக இருத்தல் வேண்டும், குறைந்தபட்ச கல்வித் தகுதியோ, வருமான வரம்போ இல்லை. ஆதி திராவிடர்/ பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகளள்/ கைம்பெண்கள்/ ஆதரவற்ற பெண்கள்/திருநங்கைகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நேரடி வேளாண்மை, கால்நடை வளர்ப்பு மற்றும் எம் எஸ் எம் ஈ பாலிசி 2021-ல் குறிப்பிட்ட தகுதியற்ற தொழில்கள் தவிர அனைத்து விதமான தொழில்களும் துவங்கலாம்.
இத்திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்கள்,கைவினைத் தொழில்கள்,குழந்தைகள் பராமரிப்பு மையம்,மெய்நிகர் சமையலறை அழகு நிலையம், யோகா ஸ்டூடியோ, செல்லப்பிராணிகள் பராமரிப்பு, துணி வெளுத்தல், ஊட்டச்சத்து நிபுணர், ஊட்டச்சத்து பொருட்கள் தயாரிப்பு, சிறுதானிய ஐஸ்கிரீம், மூலிகை நறுமண எண்ணெய், மண்ணில்லா வேளாண்மைள் ஆகிய தொழில்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தனி நபரின் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு ஜிஎஸ்டி எண்ணுடன் கூடிய விலைப்புள்ளி ஆகியவற்றுடன் “www.msmeonline.tn.gov.in/TWEES” என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
இது தொடர்பாக, மேலும் தகவல் பெற விரும்பினால் , “பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பழைய வேலை வாய்ப்பு அலுவலகம் எதிரில்,
சிட்கோ தொழிற்பேட்டை, செம்மண்டலம், கடலூர் – 607 001” அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04142-290116 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமும், தேவையும் உள்ள மகளிர் தொழில் முனைவோர்கள் மற்றும் திருநங்கைகள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையுமாறு ன மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி. ஆதித்ய செந்தில்குமார், கேட்டுக்கொண்டுள்ளார்