ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின் ” முகாம்நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு பேரூராட்சி தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர்.
முகாமிற்கு அபிராமம் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் உசேன்,பேரூராட்சி துணைத் தலைவர் மாரிஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ அலுவலர்கள் ஸ்ரீதாஸ், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொம்மையா, சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், சதீஷ்குமார், ரமேஷ் குமார், முனியசாமி, செய்திருந்தனர்.
முகாமில் ஆண்கள், பெண்கள் குழந்தைகளுக்கான பொது மருத்துவம், ரத்தப் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, கர்ப்பபைவாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை, குழந்தைகள் நல மருத்துவம், இதயம் மற்றும் நரம்பியல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், சித்த மருத்துவம், காசநோய் மற்றும் தோல்நோய் மருத்துவம்,போன்ற மருத்துவம் நடைபெற்றன. இதில்
1458 நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்