திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சித்தன்துறை ரோட்டில் உள்ள வி.ஏ.வடமலைவன்னியர் வீட்டில் வலங்கைமான் ஒன்றிய, நகர பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
கூட்டத்திற்கு திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் வேணு.பாஸ்கரன் தலைமை வகித்தார், மாநில பொதுக்குழு உறுப்பினர் வலஙகை என்.மாரிமுத்து, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் கணேச.சண்முகம், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.ஆர்.உலகநாதன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் பாமக மாவட்ட துணை செயலாளர் எம்.எம்.சண்முகவேல் வரவேற்று பேசினார்,
நிகழ்வில் ஒருங்கிணைந்த மாவட்ட மண்டல அமைப்பாளர் எஸ்.ஏ.அய்யப்பன், மாநில மகளிர் சங்க துணை செயலாளர் சர்மிளாதேவி சுரேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரியும், அனைத்து சமுதாய மக்களுக்கும் அவரவர் விகிதாசார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் இராமதாஸ் போராட்டம் அறிவித்துள்ளார்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் போராட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பு (எ) ரித்தீஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம், கிழக்கு ஒன்றிய தலைவர் பி.கார்த்திக், வலங்கைமான் நகர தலைவர் எஸ்.சுதர்சன், நகர துணைத் தலைவர்கள் எம்.சிவா, வி.ஏ.வி.சுரேஷ் மற்றும் வலஙகை என். எஸ். கண்ணன், குடவாசல் நகர செயலாளர் இளங்கோவன், குடவாசல் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.செந்தில், குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பாபு, இளைஞர் சங்க ஒன்றிய செயலாளர் எம்.மாரியப்பன், மாணவர் சங்க ஒன்றிய தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.