சோழவந்தான்

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வைகையாற்றில் பகுதியில் தடுப்பணை கட்ட ஊத்துகால்வாய் பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முள்ளிப்பள்ளம் கிராமத்தில்.வைகையாற்று ஊத்துகால்வாய் மூலம் சுமார் 500.ஏக்கர் பாசன வசதி பெற்று நெல் வாழை உள்ளிட்ட விவசாய பணிகள் நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வந்த மணல் திருட்டால் வைகையாறு பள்ளமாகியதால் சில ஆண்டுளாக இக்கால்வாயில் தண்ணீர் வரத்தின்றி போனது.இதனால் இப்பாசன விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பற்றாகுறை ஏற்பட்டு விவசாயிகள் பாதிப்படைந்து வந்தநிலையில் நேற்று பொதுபணி மற்றும் நீர்வளதுறை சார்பில் .ரூ.4.லெட்சம் மதிப்பீட்டில் ஊத்துகால்வாயை மண் அள்ளு இயந்திர உதவியோடு 2. கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் தொடங்கியது..

இது குறித்து பாசன விவசாய சங்க தலைவர் அழகுமலை கூறியதாவது.

வைகையாற்றில் மணல்தி ருட்டு மற்றும் மணல் அரிப்பால் ஊத்துகால் மேடாகிபோனது.இதனால் வாய்காலில் தண்ணீர் வரத்து தடையானதால். நெல்.வாழை பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் பாசன விவசாயிகள் பாதிப்புக்குள்ளானோம்.தற்போது ஊத்துகால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியநிலையில் ஊத்து கால்வாய் தொடங்கும் வைகையாற்று பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும். என கோரிக்கை வைத்தார்.

இது குறித்து விவசாயி மார்நாட்டான் கூறியபோது.
பெரியாறு பாசன 1.பிட்டில் உள்ள.பாசன கால்வாய் பிரிவு குடமுருட்டு வாய்கால் முதல் தென்கரை கண்மாய் செல்லும் சாலை வரை பாசன வாய்கால். கரையில் யூனியன் பொதுநிதியில் மண்சாலை அமைக்க தயாராக உள்ள நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் இதற்கான அனுமதி கேட்டு மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்றார்.மேலும்.வைகை வடிநிலை கோட்ட உ தவி பொறியாளர் சேகரன் முள்ளிப்பள்ளம் ஊத்து வாய்காலை ரூ.4.லெட்சம் நிதியில் தூர்வாரம் பணிகள் தொடங்கி உள்ளோம் மேலும் குருவித்துறை .திருவேடகம். பரவை வைகையாற்றில் பகுதியில் தடுப்பணை கட்ட.பரிந்துரை செய்து உள்ளோம் என தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *