அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.கர்ணன் படத்திற்கு பிறகு, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தை மிகவும் எதிர்பார்த்த நிலையில் உலகமெங்கும் வெளியானது…கோவை மவட்டத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான நிலையில் கோவை இரயில் நிலையம் அருகில் உள்ள சாந்தி திரையரங்கில் மேளதாளம் முழங்க ரசகர்கள் காலை முதலே உற்சாகமாக கூடி வந்தனர்.

கோவை மாநகர மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற விழாவில் திரையரங்கத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் மாவட்ட செயலாளர் உதயநிதி பாபு, மாநகர தலைவர் டேவிட் ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,மாவட்ட தலைவர் உதயபூபதி,மாநகர செயலாளர் முனிப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன்,தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *