மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பாலாஜி திரையரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் இன்று வெளியானது.

அதனை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பாக சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து மேளதாளங்களுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் அம்பேத்கர் மற்றும் பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்திலிருந்து திரையரங்கம் வரை சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமல ஜோதி தேவேந்திரன்,உதயநிதி ரசிகர் மன்ற ஒன்றிய தலைவர் சர்மா, ஒன்றிய செயலாளர் சஞ்சய், ஒன்றிய பொருளாளர் விக்கி உள்ளிட்ட நிர்வாகிகள் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுடன் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக திரையரங்கம் வந்தடைந்தனர்.

பின்னர் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து மாமன்னன் திரைப்படத்தை கண்டு களித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *