பாபநாம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசத்தில் நடைபெற்ற சிறப்பு யோகா பயிற்சி..
கல்லூரி மாணவிகள் முதல் குடும்பப் பெண்கள் உட்பட பலர் பங்கேற்பு..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கம் சார்பில் யோகா விழிப்புணர்வு மற்றும்
பயிற்சி சங்கத் தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக சங்கச் செயலாளர் தங்க.கண்ணதாசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த யோகா பயிற்சியில் கல்லூரி மாணவிகள், குடும்பப் பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கபிஸ்தலம் அறிவு திருக்கோயில் பொறுப்பாசிரியர் ஸ்ரீதர் பயிற்சி வழங்கினார்.
விவேகானந்தா கல்வி சங்கத்தின் சார்பில் 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஒரு வாரம் பாபநாசம், அம்மாபேட்டை ஒன்றிய சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிறைவாக சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *