வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் ரூ. 1கோடியே90லட்சம் மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்ட பூமி பூஜை நடைப்பெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் கடந்த 1983- ஆம் ஆண்டு திருமண மண்டபம் கட்டப்பட்டது. அது கடந்த 10ஆண்டுகளுக்கு முன் சிதிலமடைந்த நிலையில் அதனை இந்து சமய அறநிலையப்பொறியாளர்கள் ஆய்வு செய்து அத்திருமண மண்டபத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விடுவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பக்தர்களும், பொதுமக்களும் அரசுக்கு சிதிலமடைந்த திருமண மண்டபத்தை அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் பக்தர்கள், பொது மக்கள் பயன்படுத்தும் வகையில்கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் தற்போது ரூ. 1கோடியே90லட்சம் மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு பூமி பூஜை நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், ஒப்பந்தகாரர் தஞ்சை வி. கே. கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் கார்த்திகேயன், இந்துசமய அறநிலையத்துறை செயற்பொறியாளர் மற்றும் ஆலய அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *