கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளப்போட்டி..

கரூர் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப்போட்டி கரூர் தான்தோன்றி மலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்திய தடகள மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பெண் தடகள வீராங்கனைகளை கண்டறிந்து உலக அளவிலும் ஒலிம்பிக் அளவில் பங்கேற்க செய்த வெற்றி பெறுவதற்கான அனைத்து விதமான உதவிகளும் அளிக்கப்படுகிறது

அதன்படி அஸ்மிதா என்ற பெயரில் 14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட பெண் வீராங்கனைகளுக்கு தடகட போட்டிகள் நடத்தப்படுகிறது இதில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு 60 மீட்டர் 600 மீட்டர் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் குண்டு எறிதல், மற்றும் ஈட்டி எறிதல் என ஏழு போட்டிகள் நடைபெறுகின்றது. தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் இருந்து 300 மாவட்டங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளன

அதில் கரூர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது இதில் 100க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர். என மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளர் பெருமாள் தெரிவித்தார். பின்னர் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு தடகள சங்க புரவலர் கனகராஜ் பதக்கங்களும், சான்றிதழும் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சங்க தலைவர் செல்வம், துணைச் செயலாளர் நடராஜன், பொருளாளர் வி.பி.செல்வராஜ், மேற்பார்வையாளர் பாண்டியன், உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி, நடுவர் வெங்கடேஸ்வரன், சங்க உறுப்பினர்கள் ராகேஷ், சேவுக கங்காதரன் மற்றும் மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *