அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது ஐக்கிய விவசாயிகள் முன்னணி தர்ணா போராட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இர மணிவேல் தலைமை தாங்கினார் விதொச மாநில பொருளாளர் அ பழனிசாமி சிறப்பு உரையாற்றினார்
மதிமுக விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன் விவசாய பாதுகாப்பு சங்க அரியலூர் மாவட்ட அமைப்பாளர் க பாலசிங்கம் தமிழக விவசாய சங்கம் விஸ்வநாதன் சிஐடியு மாவட்ட செயலாளர் பி துரைசாமி தோழர் சிற்றம்பலம் காங்கிரஸ் விவசாய அணி மாவட்ட தலைவர் பி அறிவழகன் சிஐடியு மாவட்ட துணை தலைவர் எல்ஐசி கிருஷ்ணன் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த தங்க சண்முகசுந்தரம் முத்துபரமசிவம் பத்மாவதி உட்பட ஏராளமானோர் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்
டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இந்த தர்ணா போராட்டம் நடந்தது விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையான C2+50 கொள்முதல் விலையாக நிர்ணயித்திட வேண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ 700 ஊதியம் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் அரியலூர் மாவட்டத்தில் ஏரிகள் குளங்கள் வாய்க்கால்கள் ஆழப்படுத்தி பாசன வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடந்தது