திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குருவாடி கிராமத்தில் வலங்கைமான் கிழக்கு ஒன்றியம் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வேணு. பாஸ்கரன் தலைமை வகித்தார்,
தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.பி.உலகநாதன், மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கணேச.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், முன்னதாக வலங்கைமான் கிழக்கு ஒன்றிய பாமக தலைவர் கார்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் வருகின்ற 12.12.2025 அன்று காலை 10- மணிக்கு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு 10.5 சதவீதம் வழங்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அறப்போராட்டம் நடைபெறவுள்ளது,
இப்போராட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள குழந்தைகள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் கூட்டத்தில் குருவாடி கிராமத்தில் சுமார் 750 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 281 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளதால் குருவாடி கிராமத்திற்கு நியாயவிலை கடை கட்டிடம் கட்டி தர வேண்டும் என தமிழக அரசை கேட்டு கொள்ளப்படுகிறது, தஞ்சை – நாகை பைபாஸ் சாலையில் இருந்து குருவாடி கிராமத்திற்கு செல்லும் சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும் என தமிழக அரசை கேட்டு கொள்ளப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.