தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அருகே குண்டடத்தில் ரூ.1.77 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே, இ.ஆ.ப., தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஈரோடு–தாராபுரம் சாலையில் நத்தக்காடையூர் முதல் குண்டடம் பிரிவு வரை 18.30 கி.மீ. தூரத்திற்கு ரூ.132 கோடி, குண்டடம் பிரிவு முதல் வரப்பாளையம் வரை 6 கி.மீ. தூரத்திற்கு ரூ.45 கோடி மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுகுறித்து செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்ததாவது:-
முதல்வர் மக்களுக்கான நலத்திட்டங்களை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணம், சுயஉதவி குழுக்களின் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின்இணைப்பு, பள்ளி மாணவர்களுக்கு கண்ணொளி பரிசோதனை, காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 2021 முதல் 2025 வரை ரூ.1,185 கோடியில் 361 கி.மீ. சாலைகள் அகலப்படுத்துதல், ரூ.398 கோடியில் 559 கி.மீ. சாலைகள் வலுப்படுத்துதல், ரூ.132 கோடியில் 91 பாலங்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ.1,715 கோடி மதிப்பிலான பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
பின்னர், ஊதியூரில் 15 பெட்டிபாலங்கள், 3 சிறுபாலங்கள், 1 கூடுதல் பாலம், மையத்தடுப்பான் அமைத்தல், சாலை சந்திப்பு மேம்பாடு, நில எடுப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளும் துவக்கமிடப்பட்டன.
நிகழ்ச்சியில் திருப்பூர் நான்காம் மண்டல தலைவர் இ.ல. பத்மநாபன். குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர். மாவட்ட பிரதிநிதி பெரியசாமி மற்றும்
கண்காணிப்புப் பொறியாளர் ஏ.எஸ். விஸ்வநாதன், கோட்டப் பொறியாளர்கள் ஈ. இரத்தினசாமி, ராணி, உதவி பொறியாளர்கள் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.