தர்மபுரி பேருந்து நிலையத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் சதீஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
எச்ஐவி குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் எச்ஐவி குறித்து பாடலுக்கு நடனமாடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணி தர்மபுரி பேருந்து நிலையத்தில் இருந்து நான்கு ரோடு, நெசவாளர் காலனி வழியாகச் சென்று ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.