பண்டாரவளையில் மாநில சிலம்பப் மற்றும் கராத்தே போட்டியை முன்னாள் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
பண்டாரவளை பயில்வான் பொன்னையா நாடார் நினைவு நாளை முன்னிட்டு 4 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி மற்றும் கராத்தே போட்டி கனி கல்யாண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டிக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட சிலம்பம் மற்றும் கராத்தே மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி .சண்முகநாதன் பங்கேற்று மாணவ மாணவியருக்கு தற்காப்பு கலையின் அவசியத்தையும் அதனால் கிடைக்கும் பயன்களையும் கூறி மாணவர்களுக்கு வாழ்த்துரை கூறி போட்டியை தொடங்கி வைத்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் பெருங்குளம் பேரூராட்சி துணைத் தலைவர் சிவக்குமார் அவர்கள் பரிசுகளை வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்துரை கூறினார். தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார்,ஸ்ரீறுவைகுண்டம் ஒன்றிய கிழக்கு செயலாளர் காசிராஜன் ,ஸ்ரீறுவைகுண்டம் ஒன்றிய மேற்குச் செயலாளர் அழகேசன் , ஆல்வை ஒன்றிய ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் ,ஒன்றிய பெருங்குளம் பேரூராட்சி அதிமுக செயலாளர் வேதமாணிக்கம் மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் இப்ராஹிம் தீயணைப்பு துறை உதவி ஆய்வாளர் பாஷா , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க பொருளாளர் சுரேஷ் பண்டாரவளை பால் துறை, ஜெபராஜ், பண்டாரம், முருகன், எஸ் .ஜே .சுந்தர்ராஜ், பெருமாள்,மாஸ்டர் அருண், சபரி , மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியை உலக சிலம்ப தற்காப்பு கலை சங்கத் தலைவர் கராத்தே டென்னிசன் ஏற்பாடு செய்திருந்தார்.