ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் பகுதியில் உள்ள
ஏ. தரைக்குடி கிராமத்தில் குறைந்த மின்னழுத்தம் இருந்து வந்ததது. அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, குறைந்த மின்னழுத்தத்தை
சரிசெய்யும் வகையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய டிரான்ஸ்பார்ம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் எம்எல்ஏ தலைமை தாங்கி இதன் செயல்பாட்டினை துவக்கி வைத்தார். திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், மேற்பார்வை பொறியாளர் கணேசன் (ராமநாதபுரம்),
செயற் பொறியாளர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, திமுக அபிராமம் நகர செயலாளர் ஜாகிர்உசேன், கமுதி நகரச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார்,அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் பாரதிதாசன், காசிலிங்கம்,நந்தகோபால்,பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சேர்மன் பாலு,அரசு வழக்கறிஞர் தமிழரசன், ஊராட்சி மன்ற தலைவர் காவடி முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உதவி செயற் பொறியாளர்கள் செந்தில்குமார், ஜாகிர் உசேன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.