அழகுத் துறை சார்ந்த தொழில் இந்தியாவில் விரிவடைந்து வருவதால், ஒப்பனை நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது..
இந்நிலையில் கோவை (Maglook) மேக்லுக் ஒப்பனை கலை பயிற்சி பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டல்ஸ் அரங்கில் நடைபெற்றது..
மேக்லுக் ஸ்டுடியோஸ் மற்றும் அகாடமி நிர்வாக இயக்குனர் ரம்யா சபரிநாத் தலைமையில் நடைபெற்ற விழாவில்,லண்டன் அகாடமி ஆஃப் புரொபெஷனல் பயிற்சி மைய தலைவர் விஜய் கலந்து கொண்டு பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்..
இதில் அழகியல் துறையில் பயிற்சி முடித்த பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக திருமண கோலத்தில் உள்ள மணமகளுக்கு செய்யும் ஒப்பனைகளை செய்து காண்பித்தனர்..
தொடர்ந்து ஒப்பனைகளை செய்த மணமகள் வேடமிட்ட பெண்கள் மேடையில் ராம்ப் வாக் நடந்து அசத்தினர்-தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநில கலாச்சார உடைகளுடன் திருமண கோலத்தில் உள்ள பெண் போல ஒப்பனை இட்டு மேடையில் பெண்கள் நடந்தது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது..