10 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் இரண்டு மணி நேரத்தில் மழை நீர் எங்கும் தேடவில்லை
தூத்துக்குடி மாநகராட்சியில் புதன்கிழமைதோரும் ஒவ்வொரு மண்டலத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் புதன்கிழமை வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது முகாமிற்கு மேயர் ஜெகன் தலைமை தாங்கினார் ஆணையர் பிரியங்கா முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணகுமார். நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா. மண்டலத் தலைவர் நிர்மல் ராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் மாநகராட்சி மேயர் ஜெகன் பேசுகையில் மாநகரில் பெய்த மழையால் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை வடக்கு மண்டலத்தில் இருபதாவது வார்டு 9 வது வார்டு பத்தாவது வார்டு ஆகிய பகுதிகளில் தான் 50 சதவீதம் மழை நீர் தேங்கும் இது அதிமுக ஆட்சியில் மாநகராட்சியில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டிமீட்டர் பெய்த மழை கூட பழைய தூத்துக்குடியில் இருந்தாலும் சரி புதிய தூத்துக்குடி ஆக இருந்தாலும் சரி ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரத்தில் மழை நீர் முழுவதும் வடிந்து விட்டது
எட்டாவது வார்டு ஏழாவது வார்டு திரேஸ்புரம் பகுதியில் மீன் பிடி துறைமுகம் எங்கு உள்ளது அது ஒரு சவாலாகவே இருந்தது மழைக்காலத்தில் இரண்டு மாதம் மூன்று மாத காலம் மழை நீர் அங்க தேங்கி இருக்கும் 16 வழித்தடம் வழியாக மழைநீர் கடலுக்கு செல்கிறது. ஆறாவது வார்டு மழைநீர் தேங்கி இருப்பதற்கு காரணம் மாப்பிளையூரணி பகுதியில் இருந்து வருகின்ற மழைநீர் அங்கு தேங்கியுள்ளது அதனால் தான் ஸ்டெம் பார்க் முன்னாடி தண்ணீர் தேங்கியுள்ளது
வரும் காலத்தில் மழை நீர் தேங்காய் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது 30 வருடத்திற்கு முன்பு பார்க் முன்பு எட்டடி மழை நீர் தேங்கி இருக்கும் ஆனால் தற்போது அங்கு மழை நீர் என்னை எதுவும் தேடவில்லை ஓம் சாந்தி நகர் மாப்பிளையூரணி ஊருக்கு செல்லும் பாதை காலி இடத்தில் தான் அங்கு தண்ணீர் தேங்கியுள்ளது இரண்டாவது வார்டு எட்டையாபுரம் ரோட்டுக்கு மேற்கு 1200க்கும் மேற்பட்ட காலி மனைகள் அங்கு உள்ளதால் மழை நீர் தேங்கியுள்ளது ஜனவரி 10 வரை பருவமழை நம்மளது பகுதிக்கு உள்ளது
ரஹமத் நகரில் தண்ணீர் கிடையாது ஒவ்வொரு வருட மழைக்காலத்தில் ஒரு பாடம் படித்து வருகிறோம் காலி மனையில் உள்ள மழை நீர் தான் ரோடு பள்ளமாக உள்ள இடத்தில் தேங்கியுள்ளது 28 எம் எல் டி அளவுதான் நமக்கு அளவு ஆனால் கடலுக்கு 40 எம் எல் டி அளவு தண்ணீர் சென்று கொண்டுள்ளது மேற்கு மண்டலம் கலெக்டர் ஆபீஸ் அருகில் கோக்கூர் குளம் அந்தப் பகுதியில் மழைநீர் தேங்காாமல் இருப்பதற்காக கூடுதலாக ஒரு கழிவுநீர் கான் அமைக்கப்பட்டுள்ளது
அதன் வழியாக மழைநீர் சென்று கொண்டுள்ளது அந்தப் பகுதியில் பாதாள சாக்கடை பணியில் நடைபெறுவதால் 110 ரோடுகள் போடுவது நிறுத்தப்பட்டுள்ளது மழை நின்றவுடன் உடனடியாக சாலை அமைக்கப்படும் எந்த பகுதியில் மழை நீர் தேங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதிக்காது உடனடியாக அப்புறப்படுத்தப்படும் சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது வாகன காப்பகத்தில் நீங்கள் வாகனத்தை நிறுத்த வேண்டும் சாலைகளில் கால்நடைகள் திரிவதை நிறுத்த வேண்டும் கால்நடைகளை உங்கள் வீட்டில் வளர்க்க வேண்டும் மாடுகளால் பொதுமக்களுக்கு அதிக தொந்தரவு இருப்பதாக புகார் வருகிறது தொடர்ந்து வாரந்தோறும் மாடுகளை சாலைகளில் திரிந்தால் பிடிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது
பூங்கா எதுவும் மக்களுக்கு இடையூறு இல்லை அங்கு தேங்கியுள்ள மழை நீர் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது எந்த புகாராக இருந்தாலும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தலாம் இவ்வாறு மாநகராட்சி மேயர் ஜெகன் பேசினார்