புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்- வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் ஷாஜகான் மற்றும் மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் ஆகியோர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங்கை சந்தித்து மாணவர் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மாணவர்களுக்கு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மன்உ அளித்தார்.

அப்போது வைத்திலிங்கம் எம்.பி. புதுச்சேரி மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பும்படி வலியுறுத்தினார்.

மேலும் இது சம்பந்தமாக மத்திய கல்வித்துறை அமைச்சரிடம் பேசுவதாகவும், கல்வித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுவில் எடுத்துரைப்பதாகவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத்சிங் இட ஒதுக்கீடு சம்பந்தமாக பல்கலைக்கழக நிலைக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவதாக உறுதியளித்தார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *