சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் வால் பட்டாசில் அவரது ஓவியம் வரைந்து கோவையை சேர்ந்த ஓவியர் கவனம் ஈர்த்துள்ளார்
தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் ஐம்பது வருடங்களாக திரையுலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்…
இந்நிலையில் இவரது பிறந்தநாள் வரும் டிசம்பர் 12 ந்தேதி வர உள்ள நிலையில்,கோவையை சேர்ந்த நுண் ஓவியர் யு.எம்.டி.ராஜா,ஆயிரம் வாலா பட்டாசில் சூப்பர் ஸ்டார் உருவத்தை ஓவியமாக வடிவமைத்துள்ளார்..
ஒவ்வொரு பட்டாசுகளையும் தனித்தனியாக பிரித்து எடுத்து வரிசைப்படுத்தி அடுக்கி ஓவியமாக வடிவமைத்துள்ள இதில், வெள்ளை பட்டாசு திரிகளை ரஜினிகாந்தின் தலைமுடி வெண்மை போல வடிவமைத்து முழு பட்டாசு ஓவியமாக 24 மணி நேரம் சமயம் எடுத்து தொடர்ச்சியாக வரைந்து கவனம் ஈர்த்துள்ளார்…
உலகம் முழுவதும் ரஜினிகாந்த் அவருடைய பிறந்த நாளை பட்டாசு வெடித்து கொண்டாடும் வேளையில் அவருக்கு பட்டாசிலேயே ஓவியமாக வரைந்து பிறந்தநாள் பரிசாக சிறப்பு செய்துள்ளதாக ஓவியர் ராஜா தெரிவித்துள்ளார்..