டிசம்பர் 5 முதல் 21 வரை நடைபெற உள்ள இதில்,ஒரு இலட்சத்திற்கு மேல் வைர நகைகள் வாங்குபவர்களுக்கு தங்க நாணயம் இலவசம் தங்கம் மற்றும் வைர நகை விற்பனையில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ள ஜோய்ஆலுக்காஸ், கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள ஷோரூமில் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’-எனும் வைர நகை கண்காட்சியை நடத்துகிறது…
டிசம்பர் 5 முதல் 21 ந்தேதி வரை நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில், ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் சேர்மன் டாக்டர்.ஜோய் ஆலுக்காஸ் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்…
இதில் கோவையின் முக்கிய தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்..
தொடர்ந்து, பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ குறித்து, ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் சேர்மன் டாக்டர்.ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில்,வைர நகைகளின் தலைசிறந்த கலைநயம், அழகியல் மற்றும் புதுமையான வைர நகைகளை இந்த கண்காட்சியில் விற்பனைக்கு வைத்துள்ளதாக கூறினார்..
குறிப்பாக திருமண வைபவங்களுக்கு தேவையான வைர நகை செட் முதல், தினசரி அணிவதற்கான நவீன வைர நகைகள் வரை இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், பாரம்பரியத்தையும், நவீன வடிவமைப்பையும் ஒன்றிணைக்கும் சிறப்பு கலெக்ஷன்களும் இடம்பெற்றுள்ளதாக கூறினார்…
கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் ஷோரூமில் மட்டுமே நடைபெற உள்ள , இந்த கண்காட்சி காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பில் வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது..