பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டி ஊராட்சி தொட்டிகளுக்கு தண்ணீர் வழங்க கிராம மக்கள் கோரிக்கை
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலக்கம்பட்டி ஊராட்சி வைகை அணை பிக்கப் டேம் பகுதியில் இருந்து மதுரை திண்டுக்கல் ஆகிய பகுதிக்கு ஜல்ஜீவன் திட்டத்திற்காக தினமும் 600 லட்சம் லிட்டர் கொண்டு செல்வதற்காக முதலக்கம்பட்டி சர்க்கரை ஆலை அருகில் TWAD மூலம் திட்டம் நாளை திங்கட்கிழமை திறப்பு விழாவிற்கு தயார் ஆன நிலையில் உள்ளது.
தண்ணீர் எடுத்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் முதலக்கம்பட்டி ஊராட்சி பகுதியில் குடிநீர் எட்டு நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யப்படு வருகிறது நமது பக்கத்து மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் இந்த திட்டத்தில் முதலக்கம் பட்டிக்கு தினமும் குடிநீர் கிடைக்க அந்தத் திட்டத்திலிருந்து ஒரு பைப் லைன் அமைத்து கொடுக்குமாறு கிராம பொதுமக்கள்மேலும் முதலக்கம்பட்டி ஊராட்சிக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் நான்கு OHT தொட்டிகள் அமைத்தும் வைகை அணையில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டு வந்து பில்டர் செய்து நிரப்புவதாக சொன்னார்கள் ஆனால் இதுவரை வைகை அணையில் இருந்து தண்ணீர் எடுத்து முதலக்கம்பட்டி பகுதிக்கு பில்டர் திட்டத்துடன் வழங்கவில்லை எனவே அருகில் உள்ள பக்கத்து மாவட்டங்களுக்கு செல்வதிலிருந்து முதலக்கம்பட்டி ஊராட்சிக்குள் இருக்கும் OHT தொட்டி களுக்கு குடிநீர் வழங்க உரிய அதிகாரிகள் மற்றும் எம்.பி.எம்.எல்.ஏ ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலக்கம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்