கோவை

ஆடிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நடந்த விளையாட்டு போட்டி

*ஓட்ட பந்தயம், தொடர் ஓட்டம், ஃபுட் பால், பிரமீடு அமைத்தல், டிரில், நிறம் கண்டுபிடித்தல் உள்ளிட்ட போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்று அசத்திய ஆட்டிசம் குழந்தைகள்

நெகிழ செய்த மூளை வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் நுட்பமான விளையாட்டு திறன்..

உடல், மூளை ஒருங்கிணைந்து செயல்பட பயிற்சி வழங்கப்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன..

கோவையில் மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள ஆட்டிசம் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில், ஆட்டிசம் சிறார்கள் சிறப்பாக விளையாடி நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர். ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் அதிக உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும், அவர்கள் செய்யும் விடயங்களை அறியாதவர்களாகவும் இருப்பார்கள் .

அப்படிப்பட்ட ஆட்டிசம் குழந்தைகள் 300க்கும் மேற்பட்டோர் சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கௌமாரம் பிரசாந்தி அகாடமி பள்ளிக்கூடத்தில் பயின்று வருகின்றனர். இவர்களை உற்சாகப்படுத்த, உடல் திறனை மேம்படுத்தி மனவலிமை பெறுகின்ற வகையிலே, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

கடந்த மூன்று மாதங்களாக உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் நேச்சுரோபதி மருத்துவர்களின் ஒத்துழைப்புடன், குழந்தைகள் விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கான பயிற்சி தரப்பட்டன.

காலை முதல் மாலை வரை ஆட்டிசம் குழந்தைகள் உற்சாகமுடன் சுறுசுறுப்புடன் இயங்குவதற்காக இந்த பயிற்சி, யோகா பயிற்றுவித்தல் பயன்படுகின்றன. இந்த நிலையில் தொடர் பயிற்சிக்கு பின்னர் இன்று போட்டிகள் நடந்தன . 
ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், கால்பந்தாட்டம், மனித பிரமிடு அமைத்தல், நிறப்பந்து கண்டறிதல், டிரில் என ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் ஆட்டிசம் குழந்தைகள் நுட்பமாக ஓடியும், மனித பிரமிடு அமைத்தும், களத்தில் கால்பந்தாட்டத்தில் கோல் அடித்து நெகிழ்ச்சியடைய செய்தனர் . போட்டியில் கலந்துகொண்டவெற்றி பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

உடல் மற்றும் மனதினை ஒரு நிலையில் இயக்க, இது  போன்ற விளையாட்டு போட்டிகள் ஆட்டிசம் குறைபாடு குழந்தைகளுக்கு அவசியம் என தெரிவித்தனர்.. 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *