கோவையில் புதிய பேட்டரி வாகன தொழிற்சாலை நிருவனம் “ELAWN MASK” துவங்கப்பட்டது.

இந்த நிறுவனத்தை பனாமா நாட்டின் இந்தியாவிற்கான தூதர் யாசியேல் புரில்லோ ( YASIEL BURILLO ), நிறுவனத்தின் லோகோவை வெளியிட்டு துவக்கி வைத்தார்.

இந்த நிறுவனம் புதிய மூன்று சக்கர பேட்டரி வாகனங்களை உருவாக்க உள்ளது. குறிப்பாக பெண் தொழில் முனைவோருக்கு பயனளிக்கும் வகையில் இதன் தயாரிப்புகள் இருக்கும். இந்த வாகனங்கள் லித்தியம் பேட்டரியால் இயங்கக் கூடியவை. மிகவும் பாதுகாப்பானது எவ்வகையான மாசையும் இது ஏற்படுத்தாது. பெண்கள் எளிதில் ஓட்டி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கே.ஜி. மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவச்சலம் நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையாளர் திரு. பாலகிருஷ்ணன் புதிதாக தயாரிக்கப்பட்ட வாகனங்களை கொடி அசைத்து இயக்கி வைத்தார். பார்த்து கல்வி நிறுவனங்களின் தலைவர் அனுஷா ரவி, எலான் மாஸ்க் நிறுவனர் தலைவர் பிருத்திவி கிருஷ்ணன், பார்த்திபன், பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிறுவனத்தின் தலைவர் பிரித்வி கிருஷ்ணன் பேசும்போது இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதகத்தையும் ஏற்படுத்தாது. பெண்கள் எளிதில் ஓட்டி செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண் தொழில் முனைவோர் வாகனத்திலேயே வைத்து சிறு தொழில் கூடங்களை அமைத்து தேவையான இடத்திற்கு ஓட்டிச் சென்று தொழில் செய்யலாம். வியாபாரம் நடத்தலாம். அதற்கு உகந்த வகையில் இதன் வடிவமைப்பு இருக்கும் என்றும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *