நாமக்கல்

ரூ 25 லட்சம் முதல் 1 கோடி வரை அடமானம் இல்லாத கடன் வழங்க வேண்டாம் மானியத்துடன் கூடிய ரூ 10 லட்சம் நிதியை வழங்க வேண்டும் நாமக்கல் லாரி பாடி பில்டர் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் தீர்மானம்

நாமக்கல் வட்ட லாரி பாடி பில்டர் அசோசியேசன் 39 வது வருடாந்திர (2022- 2023) பொதுக்குழு கூட்டம் இன்று 30 .08.2023 புதன்கிழமை காலை நடந்தது நாமக்கல் பரமத்தி சாலை எஸ்.பி.எஸ் திருமண மண்டபத்தில் நடந்த இந்த 39 வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு சங்கத் தலைவர் கே. தங்கவேல் தலைமை வகித்தார்,

துணைத் தலைவர் பி. ராஜு வரவேற்று பேசினார், தீர்மானங்களை செயலாளர் டி. மனோகரன் வாசித்தார் 2022 -2023 ஆண்டுக்கான உண்டான வரவு செலவு கணக்குகளை பொருளாளர் எம். ராமலிங்கம் வாசித்தார் இறுதியில் துணைச் செயலாளர் பி. சங்கர் நன்றியுரை ஆற்றினார்

ஏராளமான லாரி பில்டர் நிறுவனங்களின் உரிமையாளர்களான நாமக்கல் லாரி பில்டர் அசோசியேசன் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த பொதுக்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அவைகள் வருமாறு:-

நாமக்கல்லில் லாரி பாடி கட்டும் நிறுவனங்கள் லைசன்ஸ் மற்றும் எம்.எஸ் .எம்.ஈ. பதிவு சான்றிதழ் பெற்று தொழில் செய்பவர்களுக்கு மூலப்பொருட்கள் வாங்குவதற்கு எம். எஸ். எம் .ஈ. தொழில் வணிகத்துறை மூலமாக ரூ 25 லட்சம் முதல் 1 கோடி வரை அடமானம் இல்லாத கடன் வழங்க வேண்டும்

இதனால் லாரி படிக்கட்டும் தொழில் நல்ல திறனுடன் விரிவடையும் இதனை முன்னிட்டு மத்திய மாநில அரசுகளுக்கு கணிசமான வரி கிடைக்கும்

நாமக்கல் மாவட்டம் இளநகர் என்ற இடத்தில் கிளஸ்டர் . தொழிற்சாலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இது சம்பந்தமாக சங்க நிர்வாகிகள் பார்வையிட்டு அதன் பணிகள் நடைபெற மத்திய அரசின் நிதி ஒதுக்கிட சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதற்கு நன்றி

நாமக்கல் மாவட்டம் முசிறிபுத்தூர் கிராமத்தில் அமைய பெற்றுள்ள தொழில்பேட்டையில் இடம் வாங்கி கிரயம் செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி, அத்துடன் சங்கத்தினருக்கு பொருளாதார உதவி செய்தவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் மேலும் தொழில் கூடம் அமைப்பதற்கு அனைத்து பிளாட்டில் உள்ளவர்களுக்கும் மானியத்துடன் கூடிய ரூ 10 லட்சம் நிதியை வழங்க வேண்டும் எனவும்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக முதலமைச்சர் குறை தீர்க்கும் கூட்டத்தில் நமது மாநில சங்க தலைவர் வெள்ளியங்கிரி கோரிக்கை வைத்தார்

அது சம்பந்தமாக நமது மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதற்க்கான செயல்பாடுகளை செய்து வரும் மாநிலத்தலைவர் வெள்ளிங்கிரிக்கு சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது

இவ்வாறு நாமக்கல் லாரி பாடி பில்டர் அசோசியேசன் பொதுக்குழு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *