விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் விருதுநகர் மாவட்ட கல்வி துறை சார்பில் ராஜபாளையம் வட்டார வள மையத்தில் வைத்து மே1 முதல் 11ஆம் தேதி வரை 6 முதல் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பயிற்சி பட்டறை வட்டார வளமையத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் மு. வேணி தலைமையில் நெருப்பு இல்லாமல் சமைக்கும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சொக்கநாதன் புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமி, ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை வள்ளிநாயகி ஜெயஸ்ரீ மற்றும் ஆசிரியர் பயிற்சியர்கள் இணைந்து உணவே மருந்து என்ற தலைப்பில் இயற்கை காய்கறி கலவை, பழக்கலவை, அவல் பாயாசம், கேரட் கேக் உள்பட பல்வேறு உணவுப் பொருட்கள் செய்து காண்பித்து விளக்கி கூறினார்கள். தினமும் 100 மாணவர் மாணவிகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி பயனுள்ள பயிற்சியாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *