கோவையில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை சார்பாக அன்னை சோனியா காந்தி பிறந்த நாள் விழா
கரும்புகடை பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினரும் ஆன அன்னை சோனியா காந்தியின் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்..
இந்நிலையில் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை சார்பாக அன்னை சோனியா காந்தி பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது..
தமிழக காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில தலைவர் முகம்மது ஆரீஃப் தலைமையில் நடைபெற்ற விழாவில், கோவை கரும்பு கடை பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் மாநில துணைத் தலைவர் பஷீர் மற்றும் குறிச்சி சர்க்கிள் தலைவர் முகமது இஸ்மாயில், கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் ஹாரூன், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அப்துல்லா அசார்,கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் தாவூத் அலி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முகமது ஈஷா, தனபால், ரியாஸ் அகமது, ஷேக் சாபு, அகமது கான், அமீர், ரிஃபாய்தீன், ரியாஸ், ரிஸ்வான் உட்பட பலர் கலந்து கொண்டனர்..