காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி ஊராட்சியில் புதியதாக டாஸ்மார்க் கடை வர உள்ளதைத் தொடர்ந்து பூமி பூஜை போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது.

விவசாயத்துக்கும், நெசவு தொழிலுக்கும் மிகவும் பெயர் பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொழிற்சாலைகள் பெருகி வருவதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வீடுகளை வாடகைக்கு எடுத்து தொழிலாளர்கள் தங்கி வருவது அதிகரித்து வருகின்றது.

தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதியை குறிவைத்து விடியா திமுக அரசு மதுபான கடைகளை திறந்து வருகின்றது. இப்போது ஒரு படி மேலே சென்று, விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் அதிகம் வசிக்கின்ற பகுதிகளில் மதுக்கடையைத் திறந்து அவர்களை போதைக்கு தள்ளுகின்ற நிலையை திமுக அரசாங்கம் எடுத்து வருகின்றது.

இதனால் தொழிலாளர்கள் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்வதும் நெசவாளர்கள் நெசவுத்தொழில் சரிவாக ஈடுபடாமல் கந்துவட்டிக்கு ஆளாகி மது போதைக்கு அடிமையாக கூட சூழ்நிலையும் ஏற்படுகின்றது.

இந்நிலையில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், புத்தேரி ஊராட்சியில் காஞ்சிபுரம் முசரவாக்கம் சாலையில் கங்கையம்மன் நகரில் பட்டா எண். 1745 சர்வே எண். 38/3A2-ல் புதியதாக டாஸ்மாக் கடை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதியில் பொதுமக்கள், விவசாய கூலி தொழிலாளிகள், விவசாய நிலங்கள் , நவீன அரிசி ஆலைகள் அதிக அளவில் உள்ள இடத்தில், புதிய டாஸ்மாக் கடை அமைக்க பூமி பூஜை போடப்பட்டு கட்டணம் கட்டும் பணி தொடங்கியுள்ளதை கண்டு அப்பகுதி மக்கள் விவசாயிகள் மிகுந்த அதிர்ச்சியுற்றனர்.

இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை வந்தால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படும். பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை . மேலும் புறவழி சாலை அருகே உள்ளதால் அதிக விபத்துகள் ஏற்படும் . அதேபோல டாஸ்மாக் அமைய உள்ள இடத்தில் மிகக்குறுகிய சாலையாக உள்ளதால் இங்கேயும் விபத்துகள் ஏற்படும் என்பதால் டாஸ்மாக் கடை வருவதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் , காஞ்சி மேற்கு ஒன்றிய கழக துணை செயலாளரும் ஒன்றிய குழு உறுப்பினருமான அம்பி விமல்ராஜ் அவர்கள் பொது மக்களுடன் வந்து மனு அளித்தார்.

இது குறித்து விமல் அவர்கள் பேசும்போது, போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாகவும், குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகிலும், சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ள நிலையில், மேற்படி இடத்தில் டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்கள், பெண்கள் என அனைவரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதுமட்டுமன்றி இந்த சாலையில் தினந்தோறும் குறைந்தது 2000 லிருந்து 3000 வரை வாகனங்கள், பள்ளி கல்லூரி மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு செல்லம் பிரதான சாலையாக உள்ளதால், இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவது மட்டுமல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வருவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக உள்ளது. எனவே, துரித நடவடிக்கை எடுத்து மேற்படி பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எந்தவகையிலும் மாவட்ட நிர்வாகமோ அல்லது மதுவிலக்கு துறைகளோ, ஒப்புதல் அளிக்கக் கூடாது என மனு மூலம் ஆட்சேபணை தெரிவித்து பொதுமக்களின் நலன் சார்பாக வேண்டுகிறோம் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *