முதல்வா் ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு
தூத்துக்குடி முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” எனும் தலைப்பிலான ஆலோசனைக் கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதனடிப்படையில் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. கானொளி காட்சி மூலம் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் நடைபெற்ற எஸ்ஐ ஆர் பணி கட்சி வளர்ச்சி பணி குறித்து ேகட்டறிந்ததை மட்டுமின்றி வரைவு வாக்காளா் பட்டியல் வௌியிட்ட பின்பு அதை ஆய்வு செய்து விடுபட்டிருந்த வாக்காளா்களையும் முழுமையாக இணைத்த பின்பு தான் நாம் முழுமையாக முழுகிணறையும் தாண்டியதாக அர்த்தம் அப்போது தான் நமக்கான முழு வெற்றியை பெறுவதற்கு களப்பணி ஆற்றியுள்ளோம் என்பதற்கான அர்த்தம் என்று தொிவித்துள்ளாா்.
கானொலி காட்சி கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளா் பெருமாள் கோவில்பட்டி தொகுதிபொறுப்பாளா் கணேசன், ஓன்றிய செயலாளா்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், சின்னப்பாண்டியன், சின்னமாாிமுத்து. செல்வராஜ், ராதாகிருஷ்ணன், மூம்மூா்த்தி, இம்மானுவேல், உள்பட மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனா்.