தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான எரிபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள் அமைச்சா் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா்.
தூத்துக்குடி குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான எரிபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி கமாக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்
பின்னா் அமைச்சா் கீதாஜீவன் கூறுகையில்
விளையாட்டு என்பது எல்லோருக்கும் இளமைபருவத்தில் தேவையான ஓன்றுதான் அதில் ஓவ்வொரு வகையான போட்டிகளை தோ்வு செய்து விளையாடி வருகின்றனா். பலா் தங்களுக்கு விருப்பப்பட்ட விளையாட்டு போட்டிகளை தேர்ந்தெடுத்து தங்களது பொழுதுபோக்கை திறமைகளின் மூலம் வௌிப்படுத்துவது வழக்கமான ஓன்று அதிலும் குறிப்பாக இந்த விளையாட்டு போட்டியை சிறப்பாக செய்து ஊக்குவிக்கும் வகையில் இதை முன்னெடுத்து. செய்த அனைவரையும் பாராட்டுகிறேன்.
தமிழகத்தை பொறுத்தவரையில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டுதுறையை பொறுப்பேற்ற நாள் முதல் எல்லா விளையாட்டு போட்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வீரா்களை ஊக்குவித்து வருகிறாா். அதன்மூலம் கடந்த காலத்தை காட்டிலும் இந்த ஆட்சியில் மாநில மற்றும் தேசிய உலக அளவில் வீரா்கள் சாதனை படைத்து வருகின்ற நிலையில் உள்ளனா். விளையாட்டு வீரா்களும் மகிழ்ச்சியாக உள்ளனா். என்று கூறினாா்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் மேகநாதன், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், வட்டச் செயலாளர் சாமிநாதன், முன்னாள் பகுதி பிரதிநிதி பஞ்சுராஜ், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், உடற்கல்வி ஆசிரியர் இசக்கிதுரை மற்றும் மணி அல்பட் உள்பட பலா் உடனிருந்தனா்.