சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கோவை கிளையில் இருந்து T.S ரோஷினி 754வது ரேங்க் பெற்று சாதனை

2023 UPSC முடிவுகளின்படி, சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கோவை கிளையில் இருந்து T.S ரோஷினி 754வது ரேங்க் பெற்றுள்ளார். ஏப்ரல் 28 அன்று, திருமதி ரோஷினியுடன் நிறுவன வளாகத்தில் ஒரு உரையாடல் நிகழ்வு நடத்தப்பட்டது.

அவர் தனது யுபிஎஸ்சி பயணத்தின் மதிப்புமிக்க அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் தனது வழிமுறைகளை முன்வைத்தார். பொதுக் கருத்துக்குப் பதிலாக ஒருவரின் ஆர்வத்தின் அடிப்படையில் விருப்பத் தேர்வு பாடத்தை தேர்வு செய்யவும் என்று அவர் தேர்வர்களுக்கு அறிவுறுத்தினார். செய்தித்தாள் படிப்பதன் முக்கியத்துவத்தையும் முக்கிய பாடங்களுடன் நிகழ்வுகளை தொடர்புபடுத்துவதையும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்து தேர்வர்களின் மன அழுத்தத்திற்கு சமூகத்தின் வெளிப்புற அழுத்தம் முக்கிய காரணம் என்றும் அவற்றை எவ்வாறு திறம்பட கையாள்வது என்பதற்கான வழிமுறைகளையும் அவர் கூறினார். அவர் தேர்விற்கு தயாராகிக்கொண்டிருக்கும் காலத்தில், கோவிட் முழு நேர மருத்துவராக பணிபுரிந்தார். இது அவருக்கு மன அமைதியைப் பெற உதவியது. எனவே, உ ங்கள் ஆர்வத்தை அறிந்து, மன அழுத்தத்தைக் குறைக்க அவற்றை சமன் செய்ய நாமே உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வரும் ஆண்டுகளில் UPSC தேர்வில் வெற்றி பெற கோவையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் வரும் 2024 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 9994551898

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *