புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில் வில்லியனூர் அடுத்துள்ள சேந்தநத்தம் கிராமத்தில் பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலோசகர் முத்துஅய்யாசாமி வரவேற்புரை வழங்கினார். வட்டாட்சியர் அய்யனார் முன்னிலை வகித்தார். செயலர் கதிரேசன், துணைத் தலைவர்கள் பரிதா, வேலுமணி நோக்கவுரை வழங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக வில்லியனூர் தாலுகா வட்டாட்சியர் சேகர் கலந்துகொண்டு பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். மண்டல அமைப்பாளர்கள் சுரங்கப் பொறியாளர் செல்வராஜ், ஜாகிர் உசேன், இரமேஷ், உடற்கல்வி விரிவுரையாளர் பிரேம்குமார், காவலர் தனலட்சுமி, கலைமாமணி இராஜாராம் வாழ்த்துரை வழங்கினர்.
பனை மரங்களின் சிறப்புகள் குறித்து இந்துஸ்தான் யூனி லீவர் லிமிடெட் பணியாளர் குப்புசாமி, பொதுப்பணித்துறை ஊழியர் செல்வராசு, ஐ.ஆர்.பி.என்..காவலர் ரகுராமன், பத்திரப் பதிவாளர் செல்வகுமார் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில்
மகளிர் சுய உதவிக் குழுவினர் முத்துலட்சுமி, ஞானாம்பாள், ராணி, அழகம்மாள், சரஸ்வதி, சாந்தி, வெண்ணிலா, வள்ளி, சித்ரா, கயல்விழி, செல்வி, சரோஜா, லலிதா, தையல்நாயகி, அம்புஜம், அமுதா மற்றும் பூவரசன், திவாகர், கமலக்கண்ணன், காவியா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று பனை விதைகளை ஊன்றினர். மண்டல அமைப்பாளர் திருநாவுக்கரசன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *