முதல்வர் உள்பட அனைவரும் ராஜினாமா செய்து விடலாம் எனவும் அமைப்பாளர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி இன்று கவுண்டன் பாளையத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெரும் விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பெயருக்கு போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றும் மாநில அந்தஸ்து விவகாரத்தில் கடந்த ஆட்சியில் கவர்னர் மீது குற்றம் சாட்டினார்கள் தற்போது அதிகாரிகளை குறை சொல்வதாக குற்றம் சாட்டினார்.
அரசு அதிகாரியை மாற்றியதற்காக தலைமைச் செயலரை அழைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்கும் ஒரு சூழ்நிலை புதுச்சேரியில் உள்ளதாக குற்றம் சாட்டிய கணபதி ஆறு மாதத்திற்கு ஒருமுறை சட்டமன்ற கூட்டுவது அறிவிக்கப்படும் எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் அதிகாரம் இல்லாத டம்மி சட்டமன்றம் தான் உள்ளது என்றார்.
புதுச்சேரியில் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் நிறைவேற்றப்
படவில்லை முதல்வருக்கும் அமைச்சருக்கும் அதிகாரப்போட்டி தான் நடந்து வருகிறது என்றும் மத்திய அரசும் புதுச்சேரிக்கு எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
2000த்துக்கு ஆசைப்பட்டு புதுவை மக்கள் தன் தலையில் மண்ணை அள்ளி போட்டு கொண்டுள்ளனர்
சட்டமன்ற உறுப்பினர்களை கேள்வி கேட்க முடியாத அளவுக்கு இந்த 2000 தான் வேலை செய்கிறது இந்த நோட்டுகள் தான் கண்ணை மறைக்கிறது என்று ரூபாய் நோட்டை காட்டி கூறிய கணபதி அதிகாரம் இல்லாத ஒரு சட்டமன்றம் இருப்பதற்கு அனைவருமே ராஜினாமா செய்து விட்டு போகலாம் என்றார்.
இரவோடு இரவாக உத்தரவு பிறப்பித்து மூன்று நியமனம் எம்எல்ஏக்கள் நியமித்த மத்திய அரசு சந்திர பிரியங்கா ராஜினாமா விவகாரத்தில் மெத்தனம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்.
செய்தியாளர் சந்திப்பின் போது துணை அமைப்பாளர் வடிவேல் கவுண்டர், வன்னியர் சங்க தலைவர் துரை, வன்னியர் சங்க துணை தலைவர் பாண்டுரங்கன், பொருளாளர் நரசிம்மன், நகரத் தலைவர் தமிழ்ச்செல்வன் இளைஞர் சங்க பொறுப்பாளர் சங்கீத் தொழிற்சங்க செயலாளர் கிருஷ்ணதேவன், தலைமை நிலைய செயலாளர் சுப்பிரமணி,மகளிர் சங்க பொறுப்பாளர் ஏபில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *