நாமக்கல்

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர்
இரா. வேலுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-

காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நாளை 30.10.2023 அன்று புதுடெல்லியில் நடைபெறுகிறது.

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இந்தாண்டு குறுவை சாகுபடிக்கு முறையாக தண்ணீர் கர்நாடகாவில் இருந்து ஒழுங்காற்றுக்குழு தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்யவில்லை.

கர்நாடகா அணைகளில் இந்தாண்டு போதிய தண்ணீர் இருந்தும் ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் இரண்டும் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டு கர்நாடகாவிற்கு சாதகமாக ஒருதலைபட்சமாக காவிரி நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி ஒழுங்காற்று குழு செயல்பாடு உள்ளது.

தற்போது கர்நாடகா பகுதியில் பருவ மழை பொழிவின் விளைவாக அங்கு உள்ள அணைகளில் தற்போது போதிய தண்ணீர் இருப்பு உள்ளது.

நாளை 30.10.2023 திங்கள்கிழமை நடைபெறும் ஒழுங்காற்றுகுழு கூட்டத்தில் தற்போது காவிரி டெல்டா பாசனத்திற்கு சம்பா தாளடி துவங்க காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு உண்டான பங்கீட்டு தண்ணீர் கர்நாடகத்தில் உள்ள அணையில் இருந்து காவிரியில் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

நாளை 30.10.2023 திங்கள் கிழமை
நடைபெறும் காவிரி ஒழுங்காற்றுக்குழு தமிழ்நாட்டிற்கு துரோகம் விளைவிக்காமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில்
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம்
மாநில தலைவர்
இரா. வேலுசாமி
வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டு உள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *