ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்


திருவாரூர் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையின் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம், தேவகண்டநல்லூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையின் சார்பில் நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் 1212 பயனாளிகளுக்கு 5 கோடியே 22 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டாவினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள் மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் உடனிருந்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
உண்ண உணவு, இருக்க இடம் இதெல்லாம் தான் மனிதன் வாழ்வதற்கான அத்தியவாசிய தேவைகளாகும். அதனடிப்படையில் அடிப்படை வசதிகளில் ஒன்றான வீட்டுமனை பட்டா மக்களின் கனவினை நிறைவேற்றும் வகையில் கலைஞர் அவர்களின் நூற்ற}ண்டு விழாவினை முன்னிட்டு திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட 782 பயனாளிகளுக்கு தலா 45000 மதிப்பீட்டிலும், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட 200 பயனாளிகளுக்கு தலா.30000 மதிப்பீட்டிலும், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட 230 பயனாளிகளுக்கு தலா 48000 மதிப்பீட்டிலும் என 1212 பயனாளிகளுக்கு 5 கோடியே 22 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி நீர்நிலைகளுக்கு அருகே வசிப்பவர்களுக்கு அரசு மாற்று இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மக்கள் எந்தவித வருத்தமுமின்றி நீர்நிலை பகுதிகளில் வசிக்காமல் அரசு ஒதுக்கியுள்ள இடத்தில் வசிக்க விரும்ப வேண்டும். நீங்கள் ஒத்துழைத்தால் மட்டுமே குடியிசையில்லா திருவாரூர் மாவட்டத்தினை உருவாக்க முடியும். மேலும் மக்கள் நலன் சார்ந்த அரசின் அனைத்து திட்டங்களும் மக்களிடையே சேர்ப்பதற்காகவே நாங்கள் செயல்படுகிறோம்.

நிச்சயம் அதற்காக உழைப்போம் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.சங்கீதா, திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் திரு.கலியபெருமாள், திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் வாரை பிரகாஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் இரா. சங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி, ஊராட்சிமன்றத்தலைவர் கேப்டன் எம்.ரவி, வட்டாட்சியர்கள், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *