ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்;-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியம், தெற்கு சங்கரன்கோவில் ஊராட்சி,ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் 29.11.2023 அன்று கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

சங்கரன்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் ராஜா முகாமை தொடங்கி வைத்தார். சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லாலா சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியம் வரவேற்புரை ஆற்றினார் முகாமில் திருநெல்வேலி கோட்ட உதவி இயக்குநர் மரு.சுமதி மற்றும் சங்கரன்கோவில் உதவி இயக்குநர் மரு.திருநாவுக்கரசு ஆகியோர் தொழில்நுட்ப உரை ஆற்றினர்.

சுமார் 345 பசுக்களுக்கு குடற்புழு நீக்க மருந்துகள் கொடுக்கப்பட்டது. 1316 செம்மறி ஆடு, 375 வெள்ளாடு, 225 கோழி ஆகிய கால்நடைகளுக்கு நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி பிரிவு (1962) மரு.சந்திரசேகர் மற்றும் அவர்கள் குழு,கால்நடை உதவி மருத்துவர்கள் குழு சந்திரலேகா,வசந்தா,சிமியோன்,சர்மதி, கால்நடை ஆய்வாளர் கோபால் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மனோன்மணி, அனிதா,சந்தனமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர்.சிறந்த கிடேரி கன்றுகள் மற்றும் நல்ல முறையில் பசுமாடுகளை பராமரிப்போருக்கான பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இம்முகாமில் சினை பரிசோதனை,குடற்புழு நீக்கம் , செயற்கைமுறை கருவூட்டல்,ஆண்மை நீக்கம்,செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பாம்புக்கோவில் சந்தை கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் சிமியோன்
நன்றியுரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *