தென்காசியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு;-

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஊராட்சி மன்ற கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் தென்காசி மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த கோரிக்கை மனுவில் டி.என்.பாஸ் முறையை மாற்றி மீண்டும் பி.எப்.எம்.எஸ் முறையை செயல்படுத்த வேண்டும்.
பசுமை வீடு திட்டம் கலைஞர் பெயரில் வழங்க வேண்டும், ஊராட்சிக்கு தேவையான தளவாடப் பொருட்களை தலைவரே கொள்முதல் செய்ய அதிகாரம் வழங்க வேண்டும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், கேரளா, கர்நாடகா, ஆந்திராவைப் போல் ஊராட்சி மன்ற தலைவருக்கு ரூபாய் 30,000 சம்பளம் வழங்க வேண்டும், சுய உதவிக் குழு மற்றும் வாழ்ந்து காட்டுவோம் போன்ற திட்டங்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் , ஊராட்சியில் உள்ள காலியிடங்களை ஊராட்சி செயலர் ஆப்ரேட்டர் துப்புரவு தொழிலாளர்களை தலைவர்களை நியமிக்க அதிகாரம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தது

நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி, துனைதலைவர் அன்புராணி
பொதுச் செயலாளர்கள் செய்யது இப்ராஹிம். வீரபாண்டியன் பொருளாளர் ராஜ்குமார், தென்காசி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் சத்யராஜ் ,நீதிராஜன்,வேல்சாமி ,பாண்டிய ராஜன், குரு சண்முகப்பிரியா. கணேசன், மாரியப்பன், பூமிநாத், முகமது உசேன், முத்துலட்சுமி ராமதுரை,சந்திரசேகர் முத்துப்பாண்டியன் தினேஷ் குமார் செய்தி தொடர்பாளர் சிவா ஆனந்த், விசுவாசம் ராஜேந்திரன் அழகு துரை, கல்யாண சுந்தரம் உட்பட பலர் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *