சென்னை மொபைல்ஸ் நிறுவனம் சார்பாக விவோ எக்ஸ் 100 (Vivo x 100) வகை மாடல் மொபைல் போன்கள் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது…

மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் சென்னை மொபைல்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது.

புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்வதில் தனி சிறப்புடன் செயல்பட்டு வரும் சென்னை மொபைல்ஸ் இந்தியாவின் முன்னனி நிறுவனங்களின் புதிய வகை மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றனர்..

இந்நிலையில் விவோ நிறுவனத்தின் புதிய வகை X 100 வகை மாடல் போனை சென்னை மொபைல்ஸ் கோவையில் அறிமுகம் செய்தது..இதற்கான அறிமுக விழா அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சம்சு அலி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஃபாங் டெக்னாலஜி நிறுவனத்தின் பொது மேலாளர் டாம்,துணை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன்,உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய விவோ X100 மாடல் போன்களை அறிமுகம் செய்தனர்..

தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சம்சு அலி,புதிய வகை மாடல்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ எக்ஸ் 100 மற்றும் புரோ என இரண்டு வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைப்பதாகவும்,இதன் அதி்நவீன தொழில் நுட்பத்திலான கேமராக்கள்,மீடியா துறை மற்றும் துல்லியமான படங்களை எடுப்பவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய வகை போன்கள் குறித்து தெரிந்து கொள்ள சென்னை மொபைல்ஸ் அனைத்து ஷோரூம்களிலும் பிரத்யேகமாக டெமோ மாடல்கள் வைத்திருப்பதாகவும்,விலை,தொழில்நுட்பம் போன்ற தகவல்களை விற்பனை பிரதிநிதிகளிடம் வாடிக்கையாளர்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்..

அறிமுக விழாவில் நீண்ட நாள் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.விழாவில் பாடல் கச்சேரி,மேஜிக் ஷோ உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *