குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில்
மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கம்:-

தென்காசி மாவட்டம்
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது கல்லூரி முதல்வர் ஜெய் நிலாசுந்தரி தலைமை தாங்கினார்.

கல்லூரியின் மகளிர் பயில்வுகள் மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கில் மகளிருக்கான அதிகாரம், உரிமைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து விளக்கப்பட்டது.

கம்ப்யூட்டர் அறிவியல் துறை இணைப்பேராசிரியர் மாலதி வரவேற்று பேசினார்.

தென்காசி மாவட்ட சமூகநல அலுவலர் மதிவதனா, ஓஎஸ்சி மைய நிர்வாகி ஜெயராணி, பெண்கள் அதிகார மாவட்ட மைய ஒருங்கிணைப்பாளர்
புஷ்பராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

அவர்கள் பேசும்போது பெண்களுக்கு அதிகாரம் என்பது என்ன, பெண்கள் தனக்கானவற்றை தேர்ந்த்தெடுப்பதில் கவனம் கொள்ளுதல், பெண்களுக்கான அவசர உதவி எண் 181 மற்றும் 1930 குறித்து கருத்தரங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில் மகளிர் பயில்வுகள் மைய உறுப்பினர்கள்
முனைவர் கெளசல்யா, முனைவர் விஜிலா நேசமணி கருத்தரங்கு ஒருங்கிணைத்தனர். மாணவி ஸ்வேதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இறுதியில் மகளிர் பயில்வுகள் மைய ஒருங்கிணைப் பாளர் மற்றும் விலங்கியல் துறை இணை பேராசியர் இசக்கியம்மாள் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *