புதுவை கல்மண்டபத்தில் கடந்த 31−12−23 அன்று காலை முத்துலட்சுமி தன் வீட்டருகே நின்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டுபேர் முத்துலட்சுமி கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க செயினை கண் இமைக்கும்,நேரத்தில் பறித்துக்கொண்டு சென்றனர்.

இதனையடுத்து முத்துலட்சுமி மகன் பாலமுருகன்(53)
நெட்டப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா வீடியோவை விழுப்புரம் சிசிடிவி குற்றபிரிவில் ஆய்வுசெய்தனர்.

மேலும் இந்த வீடியோவை சென்னை டெல்டா பிரிவில் ஆய்வுசெய்தபோது, அதில் இருப்பவன் வடலூரைச்சேர்ந்த கெளதம் என்று தெரியவந்தது. இவன் பழைய குற்றவாளி என்றும் புதுவை ஏழு காவல்நிலையங்களில் 17 வழக்குகள் உள்ளதாகவும் தமிழகத்தில் குண்டர் சட்டத்தில் 4 முறை கைதுசெய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து எஸ்.ஐ.குப்புசாமி தலைமையில் போலீசார்கள் சிவக்குமார், வினோத் குழுவினர் வடலூர் கெளதமை கைது செய்து விசாரித்ததில் பண்ருட்டி வடவாம்பாளையத்தைச் சேர்ந்த நண்பன் சண்முகம் துணையுடன்தான் இந்த செயின்பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து 4 பவுன்செயின் கெளதமிடம் இருந்து கைபற்றப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *