தேசிய விவசாயிகள் சங்கங்களோடு இணைந்து ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு காரைக்காலில் போராட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம்.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே புதுச்சேரி ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பும், தேசிய அளவில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து செயல்படும் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கிசான் விக்காஸ் சமித்தி ஆகிய அமைப்புகளோடு இணைந்து போராட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினர்.

ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பின் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளரும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில தலைவருமான டாக்டர் எஸ். ஆனந்த்குமார் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் தலைவர் சர்வண் சிங் பன்தேர் மற்றும் கிசான் விக்காஸ் சமித்தியின் தலைவர் குர்அம்நீத் சிங் மங்கட் அவர்கள் கண்டன உரை ஆற்றினார்.

அவர்கள் பேசும் பொது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புதுதில்லியில் ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு நடத்திய பெரும் போராட்டத்திற்கு பிறகு இந்திய ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை இன்றுவரை நிறைவேற்றவில்லை. அதனால், மீண்டும் தில்லியை நோக்கி போராடும் கட்டாயம் எழுந்துள்ளது. அதற்கு புதுச்சேரி யூனியன் பிரதேச விவசாயிகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும், மேலும் இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை இந்திய ஒன்றிய அரசிடம் கொண்டு சேர்ப்பதாகவும் அவர்கள் பேசினார்.

விவசாயிகளை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும். விவசாயிகளுக்கும், விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் 58 வயதிற்கு பிறகு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பயிர் காப்பிட்டு சந்தாவை அரசே ஏற்கவேண்டும். பயிர் சேதத்திற்கான இழப்பீடு மட்டும் பாதிப்பை ஈடு செய்ய இயலாது. அது போதவும் போதாது.

அழிந்த பயிர்களோடு விவசாயிகளின் வீண் போன கடும் உழைப்பையும் அரசு ஈடு செய்ய வேண்டும். அதற்கு”மேலாண்மை அகவிலைப்படி” ஏக்கருக்கு தலா 5000 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாய இடுபொருட்கள் மற்றும் உற்பத்தி மீதான சரக்கு மற்றும் சேவை வரிகளை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் ஒன்று வேண்டும்.

காரைக்காலில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். புதுச்சேரி அரசின் ஒரே வேளாண் கல்லூரியான பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஊழல் குற்றச்சாட்டுகள் மீது மத்திய புலனாய்வு துறை விசாரணைக்கு உத்தரவிட்டு அதை காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் பேசிக், பாப்ஸ்கோ, ஜேபிகாஸ்பின், கான்ஃபெட் , அமுதசுரபி, ஸ்பின்க்கோ போல அந்த கல்லூரியும் மூடப்படக்கூடாது. கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது போல விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் நிவாரணம் உடனே புதுச்சேரி அரசு வழங்க வேண்டும். டாடா மேஜிக் ஓட்டுனர்கள் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறையின் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் ஊழியர்களின் குறைகள் மீது கவனம் செலுத்தி அவற்றை தீர்த்து வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர், பெண்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சந்திரசேகரன் மற்றும் செல்லத்துரை சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ராஜதுரை அனைவரையும் வரவேற்றார். மத்திய சங்க தலைவர்கள் ஹிந்தியில் பேசியதை நந்தினி தமிழில் மொழி பெயர்த்தார். நிகழ்ச்சியின் இறுதியில் மோகனசுந்தரம் அனைவருக்கும் நன்றி உரைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *