திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தனியார் திருமண மண்டபத்தில், தஞ்சைத்தமிழ் மன்றத்தின் ஐந்தாம் ஆண்டு விழா நடைபெற்றது. விழா திருச்சி ஆ.வீ.செ. குருமூர்த்தி குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சியுடன் குடவாசல் தன்யா பரதநாட்டியத்துட னும் தொடங்கியது.

முற்பகல் நிகழ்வுக்கு பொற்கை பாண்டியனும், பிற்பகல் நிகழ்வுக்கு அன்புவல்லி தங்கவேலரும் தலைமை வகிக்க, கோவை இசைக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், வலங்கைமான் ஜெய. இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகிக்க, தஞ்சைத்தமிழ் மன்ற தலைவர் இராணி லட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர்களாக மணற்பாறை தொன்மைமிகு தமிழ்ச் சங்கத் தலைவர் அரிமா சௌமா இராசரத்தினம், திரைப்படப் பாடலாசிரியர் கவிக்கோ விக்டர்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை மருத்துவர் செகவான், சுப முருகானந்தம், சென்னை ஞால ரவிச்சந்திரன், தம்பியின் தம்பி,கோ. தெய்வசிகாமணி, சேலம் சக்தி அருளானந்தம் ஆகியோருக்கு கவிஞர் கம்பதாசன் விருது வழங்கப்பட்டது.
மன்னை வாசுதேவன், வடுவூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு சண்முகசுந்தரனார் விருதும், குடந்தை ஏ. எஸ். மூர்த்தி, பட்டுக்கோட்டை அன்புவல்லி தங்கவேலர், திருநாகேஸ்வரம் குஞ்சித சுகுமார் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
தஞ்சைத் தமிழ் மன்ற நிறுவனர், செயலர் தமிழ்ச்செம்மல் இராம. வேல்முருகன், சரஸ்வதி பாசுகரன், ஈழ வேங்கை தம்பியின் தம்பி ஆகியோர் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
விழாவில் ஒன்பது நூல்கள் வெளியிடப்பட்டன. இளம் தவில் கலைஞர்களின் தவிலிசைக்குப் பிறகு பொருளாளர் தேவநாதன் ஆண்டறிக்கை வாசிக்க, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள், கவிஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் சித்தார்த் பாண்டியன், பேச்சியம்மாள், இராஜேஷ்,மேகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் சண்முகம் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்வுகளை முத்து விஜயன் தொகுத்து வழங்கினார்.