மாதாந்திர கண் அறுவை சிகிச்சை முகாம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் வேலி ரோட்டரி சங்க அலுவலகத்தில் மாதாந்திர கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து நடைபெறுகிறது.
மருத்துவமனை ஊழியர்களுடன் செவிலியர் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது ரோட்டரி சங்கத் தலைவர் ஜான்சன் மற்றும் செயலர் ஜுபர் திட்டத் தலைவர் சத்தியன் பாபு உள்பட உள்ள சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் 70 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில்18
பெயர்கள் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு கோவை அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இலவசமாக கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.