திருவாரூர் ராபியம்மாள் அகமது மைதீன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவாரூர் வாசன் நகரில்யில் அமைந்துள்ள RAC கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20. 21. 22. வது பட்டமளிப்பு விழா இன்று 12-05-2024 திருவாரூர் அருகே உள்ள பவித்திர மாணிக்கம். தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் பயின்ற இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக Dr c. Thiru Selvam கலந்துகொண்டு பேசுகையில் மாணவர்கள் பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். சமூகத்திற்காக பாடுபடவேண்டும். உயரிய எண்ணத்தோடும் சிந்தனையோடும் என்ன உயர்வானதாக இருக்க வேண்டும்.

படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்காக காத்திருக்கக் கூடாது. வாழ்வில் உயரவேண்டும் என்று கூறி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார் ராபியம்மாள் அகமது மைதின் மகளிர் கல்லூரி. கல்விக்குழும அனைத்து முதல்வர்கள், துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள், அலுவலகப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *