அயோத்தி அரசியல் இந்தியாவில் ஒரு மாற்றத்தையும் தராது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி பேட்டி.

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அடுத்த தத்துவாஞ்சேரி முன்னாள் எம்எல்ஏ ராமாமிர்த தொண்டைமான் சிலையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அயோத்தி அரசியல் இந்தியாவில் எந்த ஒரு மாற்றத்தையும் தராது,அயோத்தியில் 3201 ராமர் கோயில் உள்ளது.

இந்தியாவில்எந்த பகுதியில் கும்பாபிஷேக விழா நடைபெற்றாலும் அந்த பகுதி விசேஷமாக தான் இருக்கும்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ராமர் கோயில் வேண்டாம் என இஸ்லாமியாகள், கிருஸ்தவர்கள் கூட சொல்ல வில்லை.

பா.ஜ.க.தான் பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதாக சொன்னீர்கள் அயோத்தியில் எங்கே வேண்டும் என்றாலும் ராமர் கோவில் கட்டலாம் என்று சொன்னோம். ஆனால் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டவில்லை. மூன்று கிலோ மீட்டர்க்கு அப்பால் கட்டி இந்திய மக்களை திறமையாக நம்ப வைத்துள்ளார்கள்.

500 ஆண்டு கால அவமானங்கள் துடைக்கப்பட்டுள்ளது என கூறுகிறார்கள் இந்துகளுக்கு எப்பொழுது அவமானம் ஏற்பட்டுள்ளது.
300 ஆண்டுகளுக்கு மேல் மொகலாயம், ஐரோப்போ அரசு ஆண்டது,அப்போது ஆர்.எஸ். எஸ் இருந்ததா ஆனால் இந்துக்கள் தான் தற்போது பெருமான்மையாக உள்ளனர்.

இந்துக்கள் தாங்களாவே வளர்த்து கொண்டார்கள், நாங்கள் தான் வளர்த்தோம் என்று கூறி கொள்வது இவர்கள் யார் என தெரிவித்தார்.
கோவில் கும்பாபிஷேகத்தை அரசியல் ஆக்குகிறார்கள்.

இதனால் இந்து மதத்திற்கோ ராமர்க்கு எந்த பெருமையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் மனைவியை கூட கவனிக்க முடியாத ஒருவர் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வது தவறு என கூறினார்.

ராமர் கோவிலில் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட வேண்டிய விழாவை பிரதமர் மோடி இந்த விழாவை பதற்றத்துடன் நிகழந்து உள்ளது.

அருகில் ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், மாவட்ட தலைவர் டி.ஆர். லோகநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *