அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி
திருத்தேவன்குடி எனும் தேவன்குடியில் ஶ்ரீ கோதண்ட இராமஸ்வாமிகோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஆலயம் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி ஆலயமாகும், இவ்வாலயத்தில் தேவங்குடி கோதண்ட இராமஸ்வாமி கைங்கரிய ஸபா எனும் குழுவினரால் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று அயோத்தியில் இராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றதையொட்டி தேவங்குடியில் உள்ள கோதண்டராம ஸ்வாமி கோவிலில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் இராம நாம ஜபம் நடைபெற்றது.

இன்று மதியம் இராம நாம ஜெபம் சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது, மேலும் கோவிலில் உள்ள ஸீதாதேவி கோதண்ட இராமர் லக்ஷ்மணர் ஆஞ்சநேயர் ஸ்வாமிகளுக்கு பால், சந்தனம், தயிர், தேன், உள்ளிட்ட பலவகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மலர்கள் கொண்டு ஸ்வாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.தொடர்ந்து 2 மணி நேரம் ராம நாம பஜனை நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ கோதண்ட இராமருக்கு வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் தேவன்குடி, நீடாமங்கலம், மன்னார்குடி,உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *